​பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மீண்டும் உயர்வு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மீண்டும் உயர்வு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மீண்டும் உயர்த்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதையடுத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் குறைத்தும், டீசல் விலையை 46 காசுகள் குறைத்தும் எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன. 

இந்த விலைக்குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு இன்று உயர்த்தி அறிவித்துள்ளது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 30 காசுகளும், டீசலுக்கு ஒரு ரூபாய் 17 காசுகளும் உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்த கலால் வரி உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான நிதிப்பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாகவே மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை