ஓவியமாக்கப்படும் இளையராஜாவின் இசை!

நக்கீரன்  நக்கீரன்
ஓவியமாக்கப்படும் இளையராஜாவின் இசை!

ஓவியமாக்கப்படும் இளையராஜாவின்  இசை!

சை ரசிகர்கள் போற்றி பாதுகாக்க வேண்டிய சொத்து இளையராஜாவின் இசை என்று சொன்னால் மிகையாகாது. இதுவரை யாரும் தொடாத, ’ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்’ என்ற உயரத்தையும் அடைந்துவிட்டு சர்வசாதாரணமாக அடுத்தபடத்திற்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறார் இளையராஜா. அவரது சாதனைகளைப் பற்றி சமீபத்தில்  நடிகர் சங்க தலைவர் நாசர், டைரக்டர் ஜனநாதன் ஆகியோர் சென்னையில் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-


1000 படங்களுக்கு இசையமைத்து சாதனைப் படைத்த இளையராஜாவைக் கொண்டாடும் வகையில் அவரது இசைக்கு ஓவியங்களை வரையவிருக்கின்றனர் 50 முன்னணி ஓவியர்கள். இசையமைப்பாளர் இளையராஜா தமிழ் சமுதாயத்துக்கு கிடைத்த பொக்கிஷம். இதுவரை 1000 படங்களுக்கு அவர் இசையமைத்து இருக்கிறார். இதனை பாராட்டும் வகையில் சினிமாவை சாராத அவரது இசை ஆல்பங்களை ஓவியமாக தீட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இசையை சிற்பமாகவும், ஓவியமாகவும் படைத்து உள்ளனர். அதன்பிறகு அந்த சரித்திரத்தின் நீட்சியாக இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இளையராஜாவின் இசையை ஓவியமாக மாற்றும் நிகழ்ச்சி வருகிற 31-ந்தேதி பெசன்ட் நகரில் ஓவியர் சந்துரு தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் 50 ஓவியர்கள் கலந்து கொண்டு இசைக்குயேற்றபடி ஓவியம் வரைகிறார்கள். பின்னர் அந்த ஓவியங்கள் லலித் கலா அகடமியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என்று கூறினார்.

மூலக்கதை