இலங்கைக்கு 8 ஜெட் விமானங்கள் விற்பனை : ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்து

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 6, ஜனவரி 2016 (9:59 IST)

மாற்றம் செய்த நாள் :6, ஜனவரி 2016 (9:59 IST)

இலங்கைக்கு 8 ஜெட் விமானங்கள் விற்பனை : 

ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்து

 பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், இலங்கையில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று இரு நாடுகளிடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

 இதுகுறித்து, கொழும்பில் செய்தியாளர்களிடம் நவாஸ் ஷெரீஃப்  பேசியபோது,  ’’அண்டை நாடு என்பதையும் தாண்டி, இலங்கையுடனான பாகிஸ்தானின் உறவு உணர்வுப்பூர்வமானது. பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களில் பாகிஸ்தானுடன் தோளோடு தோள் நின்று இலங்கை உதவி புரிந்திருக்கிறது.

 இந்த உறவை மேலும் பலப்படுத்தும் வகையில், பல்வேறு துறைகள் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் தற்போது கையெழுத்தாகியுள்ளன.  இரு நாடுகள் இடையேயான வர்த்தகம், கலாசாரம், சுகாதாரம், நகை-நவரத்தினங்கள், கல்வி, அறிவியல்-தொழில்நுட்பம், வேளாண்மை ஆகிய துறைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது.

 இதுதவிர, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் வழிமுறைகளை மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. மேலும், பாகிஸ்தான் விமானப் படையில் பயன்படுத்தப்பட்டு வரும் "ஜே.எஃப்.17 தண்டர்' ரக ஜெட் போர் விமானங்களை இலங்கைக்கு விற்பனை செய்யவும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, இலங்கைக்கு 8 ஜெட் விமானங்கள் விற்பனை செய்யப்படும்.  இந்த ஒப்பந்தங்களை விரைவில் செயல்படுத்தும் நடவடிக்கைகளை இரு நாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளும்’’ என்றார்.

மூலக்கதை