தமிழக மீனவர்கள் 8 பேர் விடுவிப்பு

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 5, ஜனவரி 2016 (22:54 IST)

மாற்றம் செய்த நாள் :5, ஜனவரி 2016 (22:54 IST)

தமிழக மீனவர்கள் 8 பேர் விடுவிப்பு

இலங்கை கடற்படையினரால் திங்கள்கிழமை சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேர் விடுவிக்கப்பட்டனர். நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேரை முல்லைத்தீவு நீதிமன்றம் விடுவித்தது. 

முல்லைத் தீவு பகுதியில் இலங்கை மீனவர் படகு மீது அக்கரைப்பேட்டை மீனவர்களின் படகு மோதியது. இதையடுத்து 8 மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். கடல் சீற்றம் காரணமாக படகு மோதியதாக விசாரணையில் தெரிய வந்ததையடுத்து விடுவிக்கப்பட்டனர். 

மூலக்கதை