2வது பயிற்சி ஆட்டத்திலும் இந்தியா வெற்றி

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 9, ஜனவரி 2016 (20:7 IST)

மாற்றம் செய்த நாள் :9, ஜனவரி 2016 (20:7 IST)

2வது பயிற்சி ஆட்டத்திலும் இந்தியா வெற்றி

மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது பயிற்சி ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த்தில் நடந்த 50 ஓவர் போட்டியில் இந்தியா 64 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.1 ஓவரில் 249 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா 67, பாண்டே 58, ரகானே 41 ரன்கள் எடுத்தனர். மேற்கு ஆஸ்திரேலியா 250 ரன்களை எட்ட முடியாமல் 49.2 ஓவரில் 185 ரன்களில் ஆட்டமிழந்தது. ஏற்கனவே நேற்று நடந்த 20 ஓவர் போட்டியிலும் மேற்கு ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது. 

மூலக்கதை