ஆன்ட்ரியாவின் நல்ல மனசு

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
ஆன்ட்ரியாவின் நல்ல மனசு

Friday, 08 January 2016 08:06

கடந்த வெள்ளத்தில் எந்தெந்த நடிகர்களோ நேரடியாக களத்தில் இறங்கி உதவி செய்தார்கள்.

அவர்களின் புகைப்படங்கள் பல சமூக வலைதளங்களில் பரவி, சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு ஆதரவை பெருக்கியது. அவ்வளவு களேபரத்திலும் வெள்ளம் வடிவதற்குள் சம்பந்தப்பட்ட இடத்திற்கே சென்று யாரையும் கூவி கூவி அழைத்து விளம்பரம் தேடிக் கொள்ளாமல் உதவி செய்துவிட்டு வந்திருக்கிறார் நடிகை ஆன்ட்ரியா. செல்போனில் போட்டோ எடுக்க முயன்றவர்களை கூட, வேண்டாம்... என்று தடுத்துவிட்டாராம். “ஏதோ என்னால் முடிந்தது. செய்தேன். இதையேன் விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்பதுதான் ஆன்ட்ரியாவின் தங்க மனசு! இவர் போன்ற நல்லமனசு அழகிகளை ரோட்டில் இறக்கி வேடிக்கை பார்த்த வெள்ளத்தை ரசிப்பதா, வெறுப்பதா?

மூலக்கதை