இலங்கை செல்கிறார் வெளியுறவுத்துறை செயலாளர்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 8, ஜனவரி 2016 (5:20 IST)

மாற்றம் செய்த நாள் :8, ஜனவரி 2016 (5:20 IST)

இலங்கை செல்கிறார் வெளியுறவுத்துறை செயலாளர் 

இந்தியா–இலங்கை உறவு, இலங்கை தமிழர்களின் மறு குடியேற்ற பிரச்சனை, ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் பிரச்சனை ஆகியவை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இலங்கை செல்ல இருக்கிறார்.

அதற்கு முன்னதாக, அவரது பயணத்துக்கான முன் ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் இலங்கை செல்ல இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், இலங்கை மீன்வளத்துறை மந்திரி மகிந்த அமரவீர கொழும்பு நகரில் நிருபர்களிடம் பேசுகையில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் வருகிற 10ந் தேதி கொழும்பு வர இருப்பதாக தெரிவித்தார்.

மூலக்கதை