இலங்கை கிரிக்கெட் வாரிய தேர்தலில் ரணதுங்கா தோல்வி

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 3, ஜனவரி 2016 (17:28 IST)

மாற்றம் செய்த நாள் :3, ஜனவரி 2016 (17:28 IST)

 இலங்கை கிரிக்கெட் வாரிய தேர்தலில் ரணதுங்கா தோல்வி

 

இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் இலங்கை அணிக்கு உலகக்கோப்பையை 1996-ம் ஆண்டு வாங்கி கொடுத்த அர்ஜூனா ரணதுங்கா அணி தோல்வியை சந்தித்துள்ளது.

தலைவர் போட்டிக்கு அவரது சகோதரர் நிஷாந்தா போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திலங்கா சுமதிபாலா வெற்றி பெற்று இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக தேர்ந்ததெடுக்கப்பட்டுள்ளார். நிஷாந்தா 56 வாக்குகளும், திலங்கா 88 வாக்குகளும் பெற்றனர். திலங்கா சுமதிபாலா இலங்கை நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக உள்ளார்.

துணை தலைவருக்கு போட்டியிட்ட ரணதுங்கா 80 வாக்குகளே பெற்றார். அவருடன் போட்டியிட்ட ஜயந்தா தர்மதாசா 102 வாக்குகளும், கே. மதிவாணன் 90 வாக்குகளும் பெற்று துணைத் தலைவர்கள் பதவியை பெற்றனர். மற்றொரு வேட்பாளர் அசாங்கா செனேவிரத்னே 18 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் மோகன் டி சில்லா செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கொழும்பு கிரிக்டெக் சங்க தலைவர் ஷம்மி சில்வா 115 வாக்குள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்மன் நரங்கோடா 28 வாக்குகளே பெற்றார்.

மூலக்கதை