தங்கம் விலை சரிவு: ரூ.19 ஆயிரத்திற்கு விற்பனை

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
தங்கம் விலை சரிவு: ரூ.19 ஆயிரத்திற்கு விற்பனை

உலக சந்தையில் தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், தங்கம் விலை பவுனுக்கு ரூ.19 ஆயிரத்துக்கு கீழ் சென்று, ஒரு பவுன் ரூ.18 ஆயிரத்து 896-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே செல்கிறது. கடந்த 3 ஆம் திகதி தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.38-ம், பவுனுக்கு ரூ.304-ம் சரிந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.19 ஆயிரத்துக்கு கீழ் விற்பனை செய்யப்பட்டது.

மறுநாளே தங்கம் விலை உயர்ந்து, மீண்டும் ஒரு பவுன் தங்கம் ரூ.19 ஆயிரத்துக்கு மேல் சென்றது.

அதைத்தொடர்ந்து தங்கம் விலை சீரான வேகத்தில் உயர்ந்தும், குறைந்தும் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.19 ஆயிரத்துக்கு கீழ் விற்பனை ஆனது.

மூலக்கதை