கண்ணன் ராஜமாணிக்கத்தின் ‘சூது வாது’

தமிழ் முரசு  தமிழ் முரசு
கண்ணன் ராஜமாணிக்கத்தின் ‘சூது வாது’

திரைச்செய்தி Friday, December 25th, 2015

கண்ணன் ராஜமாணிக்கத்தின் ‘சூது வாது’ படத்தில் ஒரு காட்சி.

‘நான் தான் பாலா’ படத்தை இயக்கிய கண்ணன் ராஜமாணிக்கம் தற்போது இயக்கும் புதிய படம் ‘சூது வாது’. இப்படத்தில் சந்தோஷ் சரவணன் என்ற புதியவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தில் நடித்த சுனு லட்சுமி கதாநாயகி. கோவை சரளா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், செண்ட்ராயன், டி.பி.கஜேந்திரன் ஆகிய நகைச்சுவை நடிகர்கள் நடிக்கிறார்கள்.

“நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படம் எதார்த்த வாழ்வியலைச் சொல்லும். படம் முழுவதும் வரும் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களைக் கலகலப்பாகும். கிளைமாக்ஸ் பகுதி மட்டும் மனதை உருக்கும் வண்ணம் அமைந்திருக்கும்.

திருநெல்வேலி, குற்றாலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. அம்பா சமுத்திரத்தில் உருவாக்கப்பட்ட காவல் நிலையமும் கேரளாவில் உள்ள கும்பா உருட்டி அருவியும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவையும் ரசிகர்களை வெகுவாகக் கவரும் என்பது உறுதி,” என்கிறார் இயக்குநர் கண்ணன்.

மூலக்கதை