‘மாலை நேரத்து மயக்கம்’

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘மாலை நேரத்து மயக்கம்’

திரைச்செய்தி Thursday, December 24th, 2015

‘மாலை நேரத்து மயக்கம்’

ஆங்கிலப் புத்தாண்டு நெருங்கி வருகிறது. இந்தப் புத்தாண்டில் தமிழ்ச் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான முன்னணி நடிகர்கள் இப்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகூட இன்னும் முடியாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு முடிந்து, அதன் பிறகு பின்னணி இசைக் கோர்ப்பு, வசன ஒலிப்பதிவு, படத்தொகுப்பு எனப் பல வேலைகள் மீதமுள்ளன. ஆகையால், சிறு பட்ஜெட் உட்பட நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் படங்களே புத்தாண்டு நாளை ஆக்கிரமிக்க உள்ளன.

அந்த வரிசையில் இந்தப் புத்தாண்டில் தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேய்கள் ஜாக்கி ரதை’ படம் வெளிவருகிறது. அது மட்டுமில்லாமல், கருணாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அழகு குட்டி செல்லம்’ என்ற படமும் புத்தாண்டுக்கு வெளிவருவது உறுதி செய்யப்பட் டுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற படமும் புத் தாண்டு தினத்தில் வெளியாகிறது.

மூலக்கதை