மாதவன்: ரசிகர்களின் ஆதரவை நம்பி உள்ளோம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாதவன்: ரசிகர்களின் ஆதரவை நம்பி உள்ளோம்

திரைச்செய்தி Wednesday, December 23rd, 2015

இறுதிச் சுற்று படத்தின் ஒரு காட்சியில் மாதவன்.

மாதவன் நாயகனாக நடித்த ‘அலைபாயுதே’, ‘ரன்’ உள்ளிட்ட பல படங்கள் பெரியளவில் வெற்றி பெற்றன. கடந்த 2009ல் ‘குரு என் ஆளு’ என்ற படத்தில் மாதவன் தனி நாயகனாக நடித்தார். அதன் பிறகு ‘மன்மதன் அன்பு’ படத்தில் கமலுடன் சேர்ந்து நடித்தார். ‘வேட்டை’யில் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார். பின்னர் தனி நாயகனாக அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

இதையடுத்து இந்திப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி னார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனி கதாநாயக னாக நடித்துள்ளார் மாதவன். படத்தின் பெயர் ‘இறுதிச்சுற்று’. இந்தியிலும், தமிழிலும் உரு வாகி இருக்கும் இந்தப் படத்தில் மாதவன் குத்துச்சண்டைப் பயிற்று விப்பாளராக நடித்து இருக்கிறார்.

17 வயது குத்துச்சண்டை வீராங்கனைக்குப் பயிற்சி அளித்து, அவரை உலகப் புகழ் பெற வைப்பதாகக் கதை உருவாக்கப்பட் டிருக்கிறது. இதில் குத்துச்சண்டை வீராங்கனையாக ரித்திகா நடித்துள்ளார். இவர் உண்மையான வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை