7 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூ.22,350 கோடி அந்நிய முதலீடு

NEW INDIA NEWS  NEW INDIA NEWS

அந்நிய முதலீடு கடந்த அக்டோபர் மாதத்தில், 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாக வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில், கடந்த அக்டோபர் மாதம் சந்தைக்கு 22,350 கோடி ரூபாய் நிகர அந்நிய முதலீடு வந்துள்ளது.

இந்த முதலீட்டில் பெருமளவு கடன் சந்தைக்கு வந்திருக்கிறது. பங்குச்சந்தைக்கு 6,650 கோடி ரூபாயும், கடன் சந்தைக்கு 15,700 கோடி ரூபாயும் வந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரு மாதங்களில் சுமார் ரூ.23,000 கோடி அந்நிய முதலீடு இந்திய சந்தையை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன. அதனைப் பொறுத்து சந்தையின் போக்கு இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை