சிறுவனை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த இளம்பெண்: அவுஸ்திரேலியாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

NEWSONEWS  NEWSONEWS
சிறுவனை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த இளம்பெண்: அவுஸ்திரேலியாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

தெற்கு வேல்ஸ் நகருக்கு அருகில் கடற்கரை ஒன்று அமைந்துள்ளது. இங்கு வாரவிடுமுறையை கழிப்பதற்காக அக்கி அவிலா(26) என்ற பெண்ணின் குடும்பத்தினர் நேற்று பிற்பகல் வேளையில் சென்றுள்ளனர்.

அப்போது, அவரது உறவினரின் மகனான 9 வயது சிறுவன் கடற்கரையில் உள்ள பாறைகள் மீது அமர்ந்திருந்தபோது, பெரிய அலை ஒன்று சிறுவனை அடித்துக்கொண்டு கடலுக்குள் சென்றுள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியுற்ற அக்கி, சிறுவனை காப்பாற்ற கடலில் குதித்து சிறுவனை நோக்கி சென்றுள்ளார்.

சிறுவனின் தலையை கைப்பற்றி கடற்கரையை நோக்கி நீந்த முயற்சித்தபோது, அலைகளின் வீரியத்தால் அவரால் சிறுவனை பற்றிக்கொண்டு நீந்த முடியவில்லை.

இதனை கண்ட 2 வாலிபர்கள் விரைந்து சென்று இருவரையும் மீட்க முயற்சித்துள்ளனர்.

இந்த சூழலில் பொலிசாருக்கு தகவல் கிடைத்து மீட்பு படகுடன் அங்கு வந்து இருவரையும் கடற்கரைக்கு மீட்டு வந்துள்ளனர்.

சிறுவனிற்கு எந்த ஆபத்தும் நிகழாத நிலையில், அவனை காப்பாற்ற சென்ற அக்கி சுயநினைவின்றி இருந்துள்ளார்.

கடற்கரையில் முதலுதவி அளித்தும் பலனில்லாமல் போனதால், அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அவரை கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், துரதிஷ்டவசமாக மருத்துவமனையில் அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவரது உறவினர் கூறுகையில், அனைவருக்கும் உதவும் குணமுள்ள அக்கி, தன்னுடைய உறவினர் ஒருவரை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்துள்ளது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு வேல்ஸ் நகர பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை