இந்தியா- ஜேர்மனி இணைந்து புதிய தொழிற்சாலைகள்: ரூ.77 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
இந்தியா ஜேர்மனி இணைந்து புதிய தொழிற்சாலைகள்: ரூ.77 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜேர்மனி தொழில் முதலீட்டுடன் கர்நாடகா மாநிலத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவது தொடர்பாக ரூ.77 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்ளூருவில் நடைபெற்ற போஷ் நிறுவனத்தின் மென்பொருள் பிரிவு துவக்க விழாவில் ஜேர்மனி சான்சலர் ஏஞ்சலா, பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, ஜேர்மனி சான்சலர் மற்றும் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தாராமையா ஆகியோர்

ஜேர்மனி தொழில் முதலீட்டுடன் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து கர்நாடக மாநிலத்தில் ரூ.77 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.

முன்னதாக பெங்கலூரு வந்த பிரதமர் மோடி மற்றும் ஜேர்மனி சான்சலர் ஆகியோரை கர்நாடக ஆளுநர் வி.ஆர்.வாலா,

முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பெங்களூரு சர்வதேச விமான நிலையம் தொடங்கி அனைத்து முக்கிய பகுதிகளிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

மூலக்கதை