இஸ்ரேலிடம் இருந்து ஆளில்லா போர் விமானங்களை வாங்கும் இந்தியா

NEW INDIA NEWS  NEW INDIA NEWS

ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஆளில்லாத போர் விமானங்களை இஸ்ரேலிடம் இருந்து வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இஸ்ரேலிடம் இருந்து ஆளில்லாத ஹெரன்ஸ் விமானங்களை வாங்க இந்தியா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவம் கடந்த சனவரி மாதம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து அது குறித்து பரிசீலனை செய்து வந்த மத்திய அரசு 10 ஹெரன்ஸ் விமானங்களை வாங்க அனுமதி அளித்துள்ளது.

இந்த விமானங்களால் எல்லைப்பகுதியில் ஊடுருவும் தீவிரவாதிகளை கண்காணிக்கவும் அவர்களை தடுத்து அழிக்கவும் பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற ஆளில்லா விமானங்களை சீனா மற்றும் காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவத்தால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் மற்றும் சீனா இதுபோன்ற விமானங்களை பயன்படுத்தி தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை