பாம்பன் பகுதியில் சிக்கிய ராட்சத களவாய் மீன்!

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
பாம்பன் பகுதியில் சிக்கிய ராட்சத களவாய் மீன்!

இராமேஸ்வரத்தின் பாம்பன் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவரின் வலையில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் ராட்சத களவாய் மீன் சிக்கியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை கடலுக்கு சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள், மன்னார் பகுதியில் நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மீனவர் ஒருவரின் வலையில் சுமார் 25 கிலோ எடையும், 4 அடி நீளமும், 2 அடி உயரமும் உடைய ராட்சத புள்ளிக் களவாய் மீன் ஒன்று சிக்கியது.

இதுகுறித்து மரைக்காயர் பட்டினத்தில் உள்ள மத்திய மீன் ஆராய்ச்சி துறை ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், இந்த மீனின் விலங்கியல் பெயர் Epinephelus. தமிழில் களவாய் மீன் என்று அழைக்கப்படுகிறது.

களவாய் மீன்களுக்கு ஆண் தன்மையும், பெண் தன்மையும் கலந்தே பிறக்கின்றன.

முதல் 4 ஆண்டுகளில் ஆண் மற்றும் பெண் தன்மை கலந்தே இருக்கும். அதைத் தொடர்ந்து களவாய் மீன் 2 அடி நீளம் வளர்ச்சி அடைந்து பெண் ணாக இனமுதிர்ச்சி அடையும்.

மீண்டும் தன்னுடைய 15-வது வயதில் ஆண் மீனாக மாறுகிறது என தெரிவித்துள்ளார்.

இந்த ராட்சத மீனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு சென்றனர்.

மூலக்கதை