மும்பை பங்குச் சந்தை 700 புள்ளிகள் சரிந்தது: முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
மும்பை பங்குச் சந்தை 700 புள்ளிகள் சரிந்தது: முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 700 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், 300 புள்ளிகள் சரிந்து 26,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது.

இருப்பினும் காலை 9.50 மணியளவில் பங்குச் சந்தைகளில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.

சென்செக்ஸ் 160.32 புள்ளிகள் சரிந்து 26,122.77 புள்ளிகளிலும், நிப்டி 50.35 புள்ளிகள் சரிந்து 7,920.95 புள்ளிகளிலும் வர்த்தகமாகிய நிலையில் பின்னர் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது.

இதனால் இந்திய முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை