எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள வெங்காயம்: விரும்பி வாங்கும் மக்கள்

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள வெங்காயம்: விரும்பி வாங்கும் மக்கள்

எகிப்து நாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் வெங்காய விலை சற்றுக் குறைய தொடங்கியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் வெங்காய விலை உயர்ந்து காணப்பட்டது.

டெல்லியில் வெங்காய விலையை கட்டுக்குள் வைக்க டெல்லி அரசே ரூ.40-க்கு அடக்க விலை விற்பனையைத் தொடங்கியது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் வெங்காயம் மொத்த விற்பனையில் கிலோ ரூ.70க்கும், சில்லறை விற்பனையில் ரூ.80க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில், எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் தற்போது வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் கிலோ ரூ.40க்கும், சில்லறை விற்பனையில் ரூ.60க்கும், விற்கப் பட்டது.

இதற்கு முன்பு பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

ஆனால், எகிப்து வெங்காயத்தை மக்கள் விரும்பி பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

மூலக்கதை