நடேசபிள்ளை வித்தியாதரன் தொடர்ந்து அரசியலில் நீடிப்போன் என்னு கூறியுள்ளார்.
தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும்கூட, தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக ஜனநாயகப் போராளிகள் கடசியின் இணைப்பாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் கூறியுள்ளார்.
ராணுவப் புலனாய்வாளர்கள் தங்களை ஏவியிருப்பதாகக் கூறி கூட்டமைப்பு தங்களைப் புறக்கணித்தது என்கிறார் வித்யாதரன்.
அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிந்தபோது, ராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சியளிக்கப்பட்டதன் பின்னர், சமூகத்தில் இணைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் சிலர் ஒன்றிணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சி என்ற கட்சியைத் தொடங்கி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டனர்.
இவர்களின் இணைப்பாளராக மூத்த ஊடகவியலாளராகிய வித்தியாதரன் செயற்பட்டு வருகின்றார். இந்தத் தேர்தலில் தங்களுக்கு தோல்வி ஏற்பட்டிருந்த போதிலும், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களும் அச்சமின்றி அரசியலில் ஈடுபட முடியும் என்பதை நிலைநாட்டியிருப்பதாக வித்யாதரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இதை ஒரு சாதனையாகத் தாங்கள் கருதுவதாகவும் வித்தியாதரன் குறிப்பிடுகிறார். ஏவ்வித பின்புலமுமின்றி அரசியலுக்குள் பிரவேசித்துள்ள தங்களை ராணுவ புலனாய்வாளர்களே ஏவிவிட்டிருந்ததாகக் கூறி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தங்களைப் புறந்தள்ளியதன் காரணமாகவே தாங்கள் தனித்து தேர்தலில் போட்டியிட்டதாக வித்தியாதரன் கூறினார்.
தங்களை இராணுவப் புலனாய்வாளர்களே ஏவிவிட்டிருப்பதாக மிதவாத அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பலமான பிரசாரத்தை மேற்கொண்டிருந்ததாகவும் அதனை முறியடிக்கும் வகையில் தங்களால் பிரசாரத்தை முன்னெடுக்க முடியாத காரணத்தினாலேயே தாங்கள் தோல்வியடைந்ததாகவும் வித்யாதரன் கூறினார்.
எனினும் தமிழ் மக்களின் கோரிக்கைகள், பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காகக் காத்திரமான முறையில் அரசியல் செயற்பாடுகளை எதிர்காலத்தில் தாங்கள் முன்னெடுக்கவுள்ளதாகவும் வித்யாதரன் கூறினார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
