முன்னணி நிறுவனங்களை வென்று 501 கிளைகளுடன் களம் இறங்கிய ”பந்தன் வங்கி”

NEW INDIA NEWS  NEW INDIA NEWS

இந்திய வங்கித்துறையில் 501 வங்கிக் கிளைகளுடனும், 1.43 கோடி கணக்காளர்களுடன் ”பந்தன் வங்கி” புதிதாக துவங்கியுள்ளது.

இந்தியாவில் வங்கிச் சேவை அளிக்க ரிலையன்ஸ், பிர்லா போன்ற முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்ட நிலையில், ”பந்தன்” என்னும் சிறு நிதிச்சேவை அமைப்புச் வங்கி சேவை உரிமத்தை ரிசர்வ் வங்கியிடும் இருந்து பெற்றுள்ளது.

2 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள இந்திய வங்கித்துறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, 501 வங்கிக் கிளைகளுடனும், 1.43 கோடி கணக்காளர்களுடன் பந்தன் வங்கி தனது பயணத்தைத் துவங்கியது.

பந்தன் வங்கி இந்தியாவில் 501 வங்கிக் கிளைகள், 19,500 ஊழியர்கள், 2022 சேவை மையங்கள், 50 ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் 10,500 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் அளிப்பு, 1.43 கோடிக் கணக்குகள் என 24 மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட உள்ளது.

2016ம் ஆண்டு முடிவில் பந்தன் வங்கி 632 கிளைகள், 250 ஏடிஎம் என 27 மாநிலங்களில் தனது சேவையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

இவ்வங்கியின் 71% கிளைகள் ஊரகப் பகுதிகளில் மட்டுமே உள்ளது, அதிலும் 35 சதவீதம் வங்கிச் சேவை பெறாத ஊரகப் பகுதிகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த வங்கி தென் இந்தியாவில் மிகவும் குறைவான அளவில் மட்டுமே செயல்பட்டாலும், கூடிய விரைவில் விரிவாக்கம் அடையும் என தெரிவித்துள்ளது.

மூலக்கதை