வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்த பங்குச் சந்தை: விண்ணை முட்டும் தங்கத்தின் விலை!

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்த பங்குச் சந்தை: விண்ணை முட்டும் தங்கத்தின் விலை!

இந்திய சந்தையில் சென்செக்ஸ் வர்த்தகத்தில் வரலாறு காணாத அளவில் ஓரே நாளில் 1,100 புள்ளிகள் வரை சரிந்துள்ள தோடு தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

ஆசிய சந்தையில் நிலவும் மந்தமான பொருளாதார நிலையின் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களது பங்கு இருப்பைத் தொடர்ந்து குறைத்து வருகின்றனர்.

மேலும் பங்குச்சந்தையில் முதலீடு குறைந்து வருவதால் அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 66.49 ரூபாய் வரை சரிந்துள்ளது.

நிஃப்டியில் 328 புள்ளிகள் சரிந்து 7,971.20 புள்ளிகள் எட்டி 2015ம் ஆண்டு எட்டிய உயர்வை முழுமையாக இழந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலையிலேயே 66.49 ரூபாயாகக் குறைந்துள்ளது.

ஆனால் இந்தியாவில் தங்கத்தின் விலை இன்று அதிகளவில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை