பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் விவகாரம்; பினராயி விஜயனுக்கு சித்தராமையா கடிதம்
பெங்களூரு, கேரளாவில் உள்ள பள்ளிகளில் மலையாளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளிகளிலும், முதல் மொழியாக மலையாளம் கட்டாயம் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதற்காக மலையாள மொழி மசோதாவையும் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், கேரள எல்லையையொட்டிய காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கன்னடம் பயிற்றுவிக்கும் பள்ளிகளிலும் இதனை கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், இந்தியாவின் நாகரீக வலிமையானது அதன் பன்முகத்தன்மையிலேயே அச்சமின்றி எப்போதும் நிலை கொண்டுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக எல்லை பகுதிகளான காசர்கோடு போன்றவை உள்ளன. இந்த பகுதிகளில் மலையாளம், கன்னடம், துளு, பியரி மற்றும் பிற மொழிகளும் நல்லிணக்கத்துடன் அன்றாட வாழ்க்கையை வளர்த்து வருகின்றன. கல்வி மற்றும் பிற அடையாளங்களை பல தலைமுறைகளுக்கும் கொடுத்து வருகின்றன என குறிப்பிட்டு உள்ளார். சிறுபான்மை சமூகத்தினருக்கான அடையாளம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் வடிவாக அவை திகழ்கின்றன. இந்த நிலையில், ஒரு தனிப்பட்ட மொழியை கட்டாயப்படுத்துவது, அந்த குழந்தைகளுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்தி விடும் என தெரிவித்து உள்ள அவர், அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி வேண்டுகோளாக கேட்டு கொண்டார். அந்த மசோதாவை, மொழிசிறுபான்மையினரை பாதுகாப்பதற்காக கர்நாடக அரசு எதிர்க்கும் என்றும் அவர் கடிதத்தில் சுட்டி காட்டியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!
டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் மோதும் ஆட்டத்தை நடத்த தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
