ராஜஸ்தானுக்கு இன்று வருகை தந்த அமித்ஷா; விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு
ஜெய்ப்பூர், ராஜஸ்தானுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்திறங்கிய அவரை ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா நேரில் சென்று, பூங்கொத்து கொடுத்து சிறப்பான முறையில் வரவேற்றார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, ஜெய்ப்பூர் நகரில் உள்ள போலீஸ் அகாடெமியில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் அமித்ஷா பங்கேற்கிறார். இதனை முன்னிட்டு சர்மா, நிகழ்ச்சி நடைபெற உள்ள பகுதிக்கு தனிப்பட்ட முறையில் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டடார். அப்போது, டி.ஜி.பி. ராஜீவ் சர்மாவும் உடன் ஆய்வு மேற்கொண்டார். இதேபோன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள 10 ஆயிரம் பேருக்கு போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான நியமன ஆணைகளையும் அமித்ஷா இன்று வழங்குவார் என தகவல் தெரிவிக்கின்றது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!
டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் மோதும் ஆட்டத்தை நடத்த தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
