பங்கு சந்தைகள் 4-வது நாளாக கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 780 புள்ளிகள் சரிவு
மும்பை, இந்திய பங்கு சந்தைகள் இன்று மாலை நிறைவடையும்போது கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இவற்றில், மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 780.18 புள்ளிகள் சரிவடைந்து 84,189.92 புள்ளிகளாக நிறைவடைந்தது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 263.90 புள்ளிகள் சரிந்து 25,876.85 புள்ளிகளாக இருந்தது. வெனிசுலா-அமெரிக்க விவகாரம் தொடர்ச்சியாக எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்புடைய பங்குகள் வீழ்ச்சி கண்டன. உலகளாவிய விலைகளில் ஏற்பட்ட சரிவால் உலோக துறை பங்குகளும் வீழ்ச்சியடைந்து இருந்தன. அமெரிக்காவின் டிரம்ப் தலைமையிலான அரசு, இந்தியாவுக்கு, ஏற்கனவே விதித்த இறக்குமதி வரியுடன், எப்போது வேண்டுமென்றாலும் கூடுதல் வரிகளை விதிக்கலாம் என்ற அச்ச உணர்வு, அந்நிய முதலீடுகள் இந்தியாவை விட்டு வெளியேறுதல் போன்றவை முதலீட்டாளர்களுக்கு எதிர்மறையான எண்ணம் ஏற்படுத்தி உள்ளன. இவை, தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் பங்குகளின் வீழ்ச்சிக்கான காரணிகளாக, பங்கு சந்தை நிபுணர்களால் பார்க்கப்படுகின்றன. பங்கு சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக, நிறைவடையும்போது கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
