இந்திய மருந்து சந்தையில் 2025-ம் ஆண்டில் ரூ.2.4 லட்சம் கோடி வருவாய்; அறிக்கையில் தகவல்
புதுடெல்லி, இந்திய மருந்து சந்தையானது, முடிவடைந்த கடந்த 2025-ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்து 672 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டி சாதனை படைத்து உள்ளது. இது 8.1 சதவீத வளர்ச்சியாகும். தொடர்ந்து மருந்து துறையானது மீட்சியடைந்து வந்து, டிசம்பருடன் முடிந்த ஆண்டில் எதிர்பார்த்த அளவுக்கும் கூடுலான வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. இதற்கு விலை உயர்வு, புதிய மருந்து பொருட்களின் வெளியீடு மற்றும் பொருட்களின் உற்பத்தி ஆகியவை காரணிகளாக பார்க்கப்படுகின்றன. இதில், டிசம்பர் மாதத்தில் மட்டுமே மருந்து துறை 10.6 சதவீதம் என்ற அபரிமித வளர்ச்சியை கண்டது. 2026-ம் ஆண்டை எடுத்து கொண்டால், மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து, சந்தைகளில் புது பிராண்டுகளின் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சியானது 2026-ம் ஆண்டில் 7.8 சதவீதம் முதல் 8.1 சதவீதம் என 2025-ம் ஆண்டில் காணப்பட்ட அதே வளர்ச்சி நிலையில் இருக்கும் என பார்க்கப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
