இஸ்ரேலுக்கு உளவுபார்த்ததாக குற்றச்சாட்டு; ஈரானில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
டெஹ்ரான், இஸ்ரேலின் மொசாட் அமைப்பிற்கு உளவுபார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு ஈரான் அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. அந்த நபரின் பெயர் அலி அர்தெஸ்தானி எனவும், அவர் பணத்தை பெற்றுக் கொண்டு இஸ்ரேலின் மொசாட் அமைப்பிற்கு பல்வேறு ரகசிய தகவல்களை வழங்கியுள்ளார் என்றும் ஈரானின் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. கிரிப்டோகரன்சி மூலம் அவர் அந்த பணத்தை பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஈரான் காவல்துறை அதிகாரிகள் அலி அர்தெஸ்தானியை கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் இஸ்ரேலுக்கு உளவுபார்த்ததை ஒப்புக்கொண்டார் எனவும், அவருக்கு சன்மானமாக ஒரு மில்லியன் டாலர் பணம் மற்றும் பிரிட்டிஷ் விசா கிடைக்க இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அலி அர்தெஸ்தானி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதே சமயம், ஈரானில் குறிப்பாக அரசியல் மற்றும் தேச விரோத வழக்குகளில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் குறித்து பல்வேறு மனித உரிமை குழுக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.




சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!
டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் மோதும் ஆட்டத்தை நடத்த தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
