புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோவிற்கு அனுமதி வழங்காதது நல்லது; சபாநாயகர் செல்வம்
புதுச்சேரி,கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பிரசாரத்தை ஒத்தி வைத்த விஜய் கடந்த மாதம் காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனிடையே, தவெக தலைவர் விஜய் வரும் 5ம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருந்தார். புதுச்சேரியின் காலப்பட்டு முதல் கன்னியக்கோவில் வரை ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு தவெக சார்பில் புதுச்சேரி போலீசில் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோவுக்கு போலீசார் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோவிற்கு அனுமதி வழங்காதது நல்லது என்று அம்மாநில சபாநாயகர் செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோவிற்கு அனுமதி வழங்காதது நல்லதுதான். ஏனென்றால் புதுச்சேரி சிறிய நகரம். தமிழகத்தை போன்று மிகப்பெரிய சாலைகள் இங்கு இல்லை. விஜய் வேண்டுமென்றால் தனியாக மைதானம் போன்ற இடத்தில் கூட்டம் நடத்திக்கொள்ளலாம் என்றார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
