ஹாங்காங் தீ விபத்து; பலி எண்ணிக்கை 151 ஆக உயர்வு
ஹாங்காங், ஆசியாவில் அமைந்துள்ள நாடு ஹாங்காங். இதை தங்கள் நாட்டின் தன்னாட்சி பெற்ற பகுதியாக சீனா கருதுகிறது. இதனிடையே, ஹாங்காங் நாட்டின் தாய் பொ நகரில் வாங் பெக் கோர்ட்டு காம்பிளஸ் பகுதியில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடியில் ஆயிரத்து 984 வீடுகள் உள்ளன. இதில்சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வந்தனர். மேலும், அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகே மேலும் சில அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகளும் நடைபெற்று வந்தன. இதனிடையே, இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 27ம் தேதி மாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுக்குமாடி குடிருப்பின் பல்வேறு தளங்களுக்கு வேகமாக பரவியது. மேலும், கடுமான பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மர கட்டமைப்புகள் மூலமாக தீ மளமளவென அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் ஏற்கனவே 128 பேர் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. 104 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் அதிகாரி சாங் ஷுக் கூறியுள்ளார்.




ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
