சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
பீஜிங், சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங் பகுதியில் உள்ள பெங்ஹுவாங் மலையில் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் கிறிஸ்து பிறப்புக்கு பின்னர் 536-ம் ஆண்டு எழுப்பப்பட்டது. இந்த கோவிலின் துணை கட்டிடம் ஒன்று பக்கத்தில் அமைந்துள்ளது. அந்த கட்டிடத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்வதுண்டு. 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலின் துணை கட்டிடங்களில் ஒன்றாக இந்த கோவில் வேறொரு பழமையான கட்டிடத்தின் பிரதிபலிப்பாக கட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில், அப்படி வந்த சுற்றுலாவாசிகளில் ஒருவர் மெழுகுவர்த்தியையும், நறுமணம் தரும் பத்தியையும் ஏற்றும்போது தவறாக கையாண்டிருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தீ விபத்து ஏற்பட்டு, மூன்று மாடி கட்டிடத்தின் மேலிருந்து கீழ் பகுதி வரை தீ மளமளவென பரவியது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. அதில், கட்டிடத்தின் கூரையின் துண்டுகள் தீப்பிடித்து எரிந்தபடியே விழுகின்றன. இதனால், வான் வரை அடர்த்தியான கரும் புகை எழுந்தது. அந்த கட்டிடம் முற்றிலும் சேதமடைந்தது. எனினும் இதனால், உயிரிழப்புகள் எதுவும் இல்லை. சுற்றியுள்ள வனப்பகுதிகளுக்கு தீ பரவவில்லை. இதனால், கோவிலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 2009-ம் ஆண்டு அக்டோபரில் கட்டப்பட்ட இந்த துணை கட்டிடத்தில், எந்த கலாசார நினைவு சின்னங்களும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். #China I Incendio arrasa pabellón Wenchang del histórico templo Yongqing en Jiangsu.Aunque sin víctimas, el fuego destruyó gran parte de la estructura reconstruida en 2009, mientras autoridades investigan la causa.Más información: https://t.co/SeUj5UQQGx pic.twitter.com/uEASPyx6oR




ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
