ராஜமவுலியின் 'குளோப் டிராட்டர்' படத்தில் நடிப்பதை மறைமுகமாக சொன்ன மாதவன்?

  தினத்தந்தி
ராஜமவுலியின் குளோப் டிராட்டர் படத்தில் நடிப்பதை மறைமுகமாக சொன்ன மாதவன்?

சென்னை,எஸ்.எஸ். ராஜமவுலியின் “குளோப் டிராட்டர்” படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் ஆகிய மூவர் நடிப்பதை படக்குழு ஏற்கனவே அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இன்னும் பல பெரிய நடிகர்கள் இதில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராமில் “குளோப் டிராட்டர்” படத்தின் போஸ்டர்களைப் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த செவ்வாயன்று, பிரியங்கா சோப்ராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது, ​​மாதவன் அதை தனது ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். இது அவர் இப்படத்தில் நடிப்பதை மறைமுகமாக உறுதிப்படுத்தியிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை