“கும்கி 2” படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் அனுமதி

  தினத்தந்தி
“கும்கி 2” படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் அனுமதி

சென்னை, நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி என்ற திரைப்படம் கடந்த 2012ம் ஆண்டு வெளியானது. 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது கும்கி- 2 என்ற திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக இருந்தது. இந்த படத்தை தயாரிக்க கடந்த 2018-ம் ஆண்டு வாங்கி ரூ.2 கோடியே 50 லட்சத்தை பிரபு சாலமன் திருப்பித் தரவில்லை என்றும் அதனால் கும்கி 2 திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், படத்தை வெளியிட டிசம்பர் 3-ந்தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை நீக்க கோரி பிரபு சாலமன் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கவேண்டும் என்று இன்று காலையில் நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை கடைசி வழக்காக விசாரிப்பதாக உத்தரவிட்டார். இந்தநிலையில், பிரபு சாலமனின் வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. “பிரபு சாலமன் படத்தின் இயக்குனர் மட்டுமே. அவர் வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது” என 'கும்கி 2' படத்தின் தயாரிப்பு நிறுவனம் வைத்த கோரிக்கை வைத்தது. விசாரணையில் ‘கும்கி 2’ படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.

மூலக்கதை