என் வாழ்க்கையில் இதுதான் முதல் முறை...’சிகிரி’ பாடலாசிரியர்

  தினத்தந்தி
என் வாழ்க்கையில் இதுதான் முதல் முறை...’சிகிரி’ பாடலாசிரியர்

சென்னை,ராம் சரண் - புச்சி பாபு கூட்டணியில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் பெத்தி. பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில், இந்த படத்தின் முதல் பாடல் ’சிகிரி சிகிரி’ வெளியானது. இந்த பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே சாதனை படைத்தது. ஒரே நாளில் மில்லியன் கணக்கான பார்வைகளை கடந்தது. மோஹித் சவுகான் பாடிய இந்தப் பாடலுக்கான வரிகளை பாலாஜி எழுதினார். இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இதற்கிடையில், பாடலாசிரியர் பாலாஜி இந்தப் பாடல் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். எனது வாழ்க்கையில் ஒரே நாளில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடல் இது என்று அவர் கூறினார். சிகிரிக்கு எந்த சிறப்பு அர்த்தமும் இல்லை என்றும் இந்தப் பாடலுக்காக கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் செலவிட்டதாகவும் அவர் கூறினார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. ஜான்வி கபூர் இந்த படத்தில் அச்சியம்மா வேடத்தில் நடிக்கிறார். சிவ ராஜ்குமார் மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் அடுத்த ஆண்டு மார்ச் 27 -ம் தேதி திரைக்கு வர உள்ளது.

மூலக்கதை