அருள்நிதியின் “மை டியர் சிஸ்டர்” பர்ஸ்ட் லுக் வெளியீடு
சென்னை, அருள்நிதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். 'வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'டிமான்டி காலனி 2' படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் சமீபத்தில் நடித்த "ராம்போ"படம் சன்நெக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது தமிழில் ‘சிவப்பதிகாரம்', ‘குரு என் ஆளு', ‘தடையறத் தாக்க', ‘எனிமி', ‘மகாராஜா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். பிரபு ஜெயராம் இயக்கத்தில் அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் புதிய படத்தில் நடித்துள்ளனர். இதை ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தை இயக்கிய பிரபு ஜெயராஜ் இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார். இப்படம் குறித்து மம்தா மோகன்தாஸ் “அருள்நிதிக்கு அக்காவாக இந்த படத்தில் நடித்து இருக்கிறேன். அசாத்தியமான ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை சொல்லும் கதை. படத்தில் நான் டக்கர் வண்டி ஓட்டும் டிரைவராக நடித்துள்ளேன். சினிமாவில் இது எனக்கு 20-வது வருடம்” என்றார். இப்படத்தின் டைட்டில் புரோமோ சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் அருள்நிதிக்கு அக்காவாக மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார். இந்நிலையில், ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.Fairness belongs to everyone. Justice Has No Gender ♥️#MyDearSister First look is here Title Promo : https://t.co/Wce4k75pI0 @arulnithitamil @mamtamohan@jrcprabhu @nivaskprasanna @PassionStudios_ @Sudhans2017 @GTelefilms @imManishShah @MeenakshiGovin2 @Venk_editor… pic.twitter.com/PUpeLIdIhl




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
