திருமணத்திற்கு காலாவதி தேதி வேண்டும் - நடிகை கஜோல்

  தினத்தந்தி
திருமணத்திற்கு காலாவதி தேதி வேண்டும்  நடிகை கஜோல்

நடிகை கஜோல் பாலிவுட்டின் முன்னனி நாயகியாக இருந்தவர். ஷாருக்கானுடன் இவர் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. தமிழில் நடிகர் பிரபு தேவாவுடன் மின்சாரக் கனவு படத்தில் நடித்திருந்தார். பின், நீண்ட காலம் கழித்து நடிகர் தனுஷுடன் ‘வேலையில்லா பட்டதாரி - 2’ திரைப்படத்தில் வில்லியாக நடித்து கவனம் பெற்றார். கஜோல் நடிகை டுவிங்கிள் கன்னாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி‘டூ மச் வித் கஜோல் அண்ட் ட்விங்கிள்’. இந்நிலையில், ‘டூ மச் வித் கஜோல் அண்ட் ட்விங்கிள்’ நிகழ்ச்சியில் நடிகை கஜோல் கூறிய கருத்து இணையத்தில் விவாதமாக மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், திருமணத்திற்கு காலாவதி மற்றும் புதுப்பித்தல் தேதி வேண்டும் என்று நடிகை கஜோல் கூறினார். அந்த நிகழ்ச்சியில் விருந்தினர்களாக பங்கேற்ற நடிகர் விக்கி கவுசல் மற்றும் கிரித்தி சனோன் கலந்துகொண்டனர். “திருமணத்திற்கு காலாவதி தேதி வேண்டுமா?” என நடிகை டுவிங்கிள் கேட்டார். அதற்கு விக்கி, கிரித்தி மற்றும் டுவிங்கிள் ஆகிய மூவரும் 'இல்லை' என கூறினார்கள். ஆனால், நடிகை கஜோல் 'ஆம்' என்றார். இது திருமணம் வாஷிங் மெஷின் இல்லை' என அதன்பின் நடிகை டுவிங்கிள் கூறினார். ஆனால், நடிகை கஜோல் தனது கருத்தை ஆதரித்து பேசினார், “சரியான நேரத்தில் நேரத்தில் சரியானவரை மணப்போம் என்பதற்கு என்ன உத்தரவாதம்? புதுப்பித்தல் விருப்பம் இருந்தால் நல்லது. காலாவதி தேதி இருந்தால் யாரும் நீண்ட காலம் கஷ்டப்பட வேண்டாம்” என கூறினார். A post shared by prime video IN (@primevideoin)

மூலக்கதை