ஓடிடியில் ’ஹாரர் திரில்லர்’...பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்த உண்மை கதை - எதில் பார்க்கலாம்?
சென்னை,தற்போது உண்மையான நிகழ்வுகள் மற்றும் பிரபலமானவர்களின் வாழ்க்கைக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் அதிக பார்வைகளைப் பெறுகின்றன. இப்போது நாம் பேசப்போகும் படமும் பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்ததுதான் . கர்நாடக காடுகளில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவானது. இந்தப் படம் 2010- ல் கர்நாடகாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஹாரர் திரில்லர். கன்னட பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்தது . வெறும் ரூ .30 லட்சத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம் மொத்தம் ரூ. 5 கோடி வசூலித்தது. படத்தின் கதைக்கு வருகையில், சில இளைஞர்கள் மலையேற காட்டுக்குள் செல்கிறார்கள். அங்கு ஒரு ஆவணப்படத்தை படமாக்க திட்டமிடுகின்றனர் . காட்டின் மிக உயர்ந்த சிகரத்தை அடையும் நோக்கத்துடன் அவர்கள் பயணம் செய்கிறார்கள் . அப்போது அவர்கள் விசித்திரமான அனுபவங்களை சந்திக்கிறார்கள். மிக உயர்ந்த சிகரத்தை அடைய வேண்டும் என்ற இளைஞர்களின் குறிக்கோள் நிறைவேறியதா ? இடையில் அவர்கள் என்ன மாதிரியான சம்பவங்களைச் சந்தித்தார்கள் ? அவர்கள் காட்டை விட்டு வெளியேறினார்களா ? இல்லையா ? என்பதை தெரிந்து கொள்ள இந்த படத்தைப் பாருங்கள். இப்படத்தில் பெயர் ’6-5=2’. இதில் , தனுஜா , கிருஷ்ண பிரசாத், ஜானு மற்றும் விஜய் சந்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர் . தற்போது, இந்தப் படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது . இதில் சில காட்சிகள் மிகவும் பயத்தை ஏற்படுத்தும்.. எனவே குழந்தைகளுடன் இதைப் பார்க்காமல் இருப்பது நல்லது. மேலும் , இதயப் பிரச்சினை உள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது .




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
