சுரேஷ் கிருஷ்ணாவின் “அனந்தா” டீசர் வெளியீடு
ரஜினிகாந்தை வைத்து பாட்ஷா, அண்ணாமலை, வீரா, பாபா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது ‘அனந்தா’ படத்தை இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அனந்தா’ படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் தேவா, நடிகை சுகாசினி, பாடலாசிரியர் பா விஜய், பிக்பாஸ் அபிராமி, தலைவாசல் விஜய், பின்னணி பாடகர் மனோ, ஒய் ஜி மகேந்திரன், கலைப்புலி எஸ் தாணு, நிழல்கள் ரவி ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் விழா நிகழ்ச்சியில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா “ அனந்தா படம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சாய் பாபா என்னுடைய கனவில் தோன்றினார் . இந்தப் படம் புட்டபர்த்தி பாபாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் பாபா கனவில் தோன்றினார்.சாய் பாபா கனவில் தோன்றியது குறித்து நான் என்னுடைய நண்பரிடம் கூறினேன். அவர் நேற்று தான் நாங்கள் சாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு படம் எடுப்பது குறித்து பேசிக் கொண்டிருந்தோம் என்றார். இதையெல்லாம் கேட்கும் போது எனக்கு சாய் பாபா இருக்கிறார். எப்போதும் என்னை சுற்றியே என்னை அவர் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்று எனக்கு எண்ணம் தோன்றுகிறது.அதன் பிறகு தான் அனந்தா படத்திற்கான கதையை எழுதினேன். அதுவும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே நான் அந்தக் கதையை எழுதி முடித்துவிட்டேன்” என்றார். அனந்தா படத்தில் சுகாசினி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார்.Love that heals. A journey that transforms. #Anantha teaser & lyrical video out now! ✨❤️Teaser:https://t.co/khJrLswee2Lyrical Video:https://t.co/qw5dIR5xQo#AnanthaTeaser #AnanthaTheFilm




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
