ரவி தேஜாவின் 'மாஸ் ஜதாரா'வை நிராகரித்த நட்சத்திர நடிகை...யார் தெரியுமா?

  தினத்தந்தி
ரவி தேஜாவின் மாஸ் ஜதாராவை நிராகரித்த நட்சத்திர நடிகை...யார் தெரியுமா?

சென்னை,ரவி தேஜா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் 'மாஸ் ஜதாரா'. பானு போகவரபு இயக்கிய இந்த ஆக்‌சன் படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்திருந்தார். நவீன் சந்திரா , ராஜேந்திர பிரசாத், நரேஷ், பிரவீன், விடிவி கணேஷ், ஹைப்பர் ஆதி, அஜய் கோஷ், ஹிமாஜா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய பதாகைகளின் கீழ் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரித்த இந்த படம் கடந்த மாதம் 31-ம் தேதி திரைக்கு வந்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றது.இந்நிலையில், மாஸ் ஜதாரா படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது.. இந்தப் படத்திற்கு ஸ்ரீலீலா கதாநாயகியாக முதலில் தேர்வு செய்யப்படவில்லை. கீர்த்தி சுரேஷ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இயக்குனர் பானு போகவரபுவு கீர்த்தியிடம் கதை சொன்னதாகவும், அவருக்கு கதை பிடித்திருந்ததாகவும் தெரிகிறது. இருப்பினும், கீர்த்தி ஏற்கனவே பல படங்களில் பிஸியாக இருந்ததால், மாஸ் ஜதாரா படத்தை அவர் கைவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தயாரிப்பாளர்கள் ஸ்ரீலீலாவை தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இதனை அறிந்த ரசிகர்கள் ஸ்ரீலீலாவின் இடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தால், அது மாஸ் ஜதாராவுக்கு பிளஸா அல்லது மைனஸாக இருந்திருக்குமா? என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை