சரத்குமார், இயக்குனர் சங்கர் உள்ளிட்டோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  தினத்தந்தி
சரத்குமார், இயக்குனர் சங்கர் உள்ளிட்டோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பள்ளிகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார், திரைப்பட இயக்குனர் சங்கர், நடன இயக்குனர்கள் கலா, பிருந்தா உள்ளிட்டோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டலானது இமெயில் மூலம் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை