மியான்மர் கலவரப் படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்பு - 4 ஏஜென்டுகள் கைது
சென்னை,கடந்த சில ஆண்டுகளாக தாய்லாந்து நாட்டில் கைநிறைய சம்பளத்தோடு வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமான தமிழக இளைஞர்கள் குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். சுற்றுலா விசா மூலம் ஏமாற்றி அவர்களை அழைத்து சென்ற மோசடி கும்பல் மியான்மர் நாட்டில் உள்ள கே.கே.பார்க் என்ற பகுதியில் தவிக்கவிட்டனர். மிகக்குறைந்த சம்பளத்தில் அந்த அப்பாவி இளைஞர்கள் மியான்மர் நாட்டின் கலவரப் படையில் சேர்க்கப்பட்டனர். இவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு ‘சைபர் கிரைம்' குற்றப்பிரிவு போலீசார் ‘புளூ டிரை ஆங்கிள்' என்ற தலைப்பில் சிறப்பு நடவடிக்கையை தொடங்கியது. அதன்படி, வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட ராஜ்குமார் (வயது 36), மணவாளன் (35), தீபக் (27), அபிஷேக்ராஜன் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் தஞ்சாவூர், கடலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்ட வேலைவாய்ப்பு மோசடி குழுவில் ஏஜென்டுகளாக இருந்தவர்கள் ஆவார்கள. சட்டவிரோதமாக மியான்மர் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட 465 இந்தியர்கள் கடந்த 6 மற்றும் 10-ந்தேதிகளில் மீட்கப்பட்டு இரண்டு கட்டங்களாக இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 35 பேர் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் ஆவார்கள். இதில் 18 பேர்களை தாய்லாந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. இதுபோல் தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக யாராவது விளம்பரப்படுத்தினால் அதன் உண்மை தன்மையை குறித்து விசாரித்து, அவர்கள் சட்டபூர்வமான ஏஜென்டுகளா? என்பதை தெரிந்து வேலைக்கு அணுகவேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
