குழந்தைகள் தினம்: நயினார் நாகேந்திரன் வாழ்த்து
சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- குழந்தைகள், அவர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் நல்வாழ்வை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் குழந்தைகளின் மகிழ்ச்சி, கல்வி, பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் சீறிய முயற்சியால் குழந்தைச் செல்வங்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்று தான், செல்ல மகளை செல்வ மகள்களாக மாற்றும், பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம் மற்றும் ஆண் குழந்தைகளுக்கான வருங்கால வைப்புநிதி திட்டம். நாட்டு மக்களின் நலனுக்காக மட்டுமல்லாமல், நாட்டின் வருங்காலமான குழந்தைகளின் நலனுக்காகவும் பாரதப் பிரதமர் பாடுபட்டு வருகிறார். நம் குழந்தைகளின் மகிழ்ச்சிதான் நம்மை இயக்குகிறது. அத்தகைய குழந்தைகளின் கல்வியோடு சேர்த்து அவர்களின் தனித்திறமைகளையும் போற்றி வளர்ப்போம். குழந்தை செல்வங்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எனது இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
