அஜித் குமார் ரேஸிங் அணியுடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்த அணி ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. தொடர்ந்து பல்வேறு பந்தயங்களில் பங்கேற்க இந்த அணி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் எனர்ஜி டிரிங்க் பிராண்டான கேம்பா, அஜித் குமார் கார் ரேஸிங் அணிக்கு அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்படவுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை ஊக்குவிப்பது ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும் என்றும், அதன் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், உலகத்தரம் வாய்ந்த பொருட்களை மலிவான விலையில் வழங்குவதோடு, சர்வதேச அரங்கில் இந்தியாவின் திறமைசாலிகளை அவர்களின் லட்சியங்களை நோக்கிப் பயணிக்க வைப்பதும் எங்களுடைய முக்கிய நோக்கம் என்று ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.Media Release - Reliance Consumer Products Partners with Ajith Kumar RacingBengaluru, 12th November 2025: Reliance Consumer Products Limited (RCPL), the FMCG arm of Reliance Industries Limited, has announced its partnership with Ajith Kumar Racing, one of India’s most promising…இந்தப் புதிய ஒப்பந்தம் இந்திய மோட்டார்ஸ்போர்ட் விளையாட்டில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்குமார் மூலம் இந்த எனர்ஜி பிராண்ட் இளைஞர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
