சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமி அம்மன் தேரோட்டம்
உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளம் மேற்குகரையில் திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி சுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சிவகாமசுந்தரியின் பெயர் திருக்காமக் கோட்டமுடைய பெரியநாச்சியார் என்று கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளது. கோவிலில் வெளிச்சுற்றில் சித்தரகுப்தன், நடுக்கம் தீர்த்த விநாயகர், ஆதிசங்கரர், ஸ்ரீ சக்கரம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இச்சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி பூர உற்சவம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் ஐப்பசி பூர உற்சவம் கடந்த 6 ம் தேதி இரவு (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மாலை சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. காலையில் கோவிலில் இருந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக வந்து திருத்தேரில் எழுந்தருளியதும், தேர் வடம் பிடிக்கப்பட்டது. தேர் கீழ் வீதியில் இருந்து புறப்பட்டு, நான்கு முக்கிய வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது. பக்தர்கள் பலர் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். நாளை பட்டு வாங்கும் உற்சவமும் மற்றும் பூரச்சலங்கை உற்சவமும், நாளை மறுநாள் (15-ம் தேதி) காலை தபசு உற்சவமும், இரவு ஸ்ரீ சிவானந்த நாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. அத்துடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
