15,16-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு; 4.80 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
சென்னை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு தாள் -1 தேர்வும் பி.எட். முடித்த பட்டதாரிகளுக்கு தாள்-2. தேர்வும் நடத்த அறிவிக்கப்பட்டது. தொடக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளிகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. நவம்பர் 1 மற்றும் 2-ந்தேதி நடை பெறுவதாக இத்தேர்வு அறிவிக்கப்பட்டது.கல்லறை திருநாள் என்பதால் இதனை வருகிற 15 மற்றும் 16-ந்தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். தாள்-1 தேர்வை ஒரு லட்சத்து 370 பேர் எழுத உள்ளனர். இதேபோல ஞாயிற்றுக்கிழமை தாள்-2 வது தேர்வு நடக்கிறது. இதனை 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேர் எழுதுகிறார்கள். தாள்- 1 தேர்வு 367 மையங்களிலும், தாள்-2 தேர்வு 1241 மையங்களிலும் நடைபெறுகிறது. இத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணி வரை நடைபெறும். தேர்வு கூடத்திற்கு 9.30 மணிக்குள் வர வேண்டும். அதற்கு மேல் வந்தால் அனுமதிக்க மாட்டார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:- மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும். அதாவது காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வினர் கருப்பு 'பால் பென்' மூலம் எழுத வேண்டும். தேர்வினை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2 வருடத்திற்கு பிறகு இத்தேர்வு நடைபெறுகிறது. பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. எவ்வித முறைகேட்டிற்கும் இடம் அளிக்காத வகையில் தேர்வு மையங்கள் தீவிரமாக கண் காணிக்கப்படும். இவ்வாறு கூறினார். தேர்வு கண்காணிப்பு அதிகாரியாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனும், மதுரை மாவட்டத்திற்கு இயக்குனர் நரேசும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
