“கும்கி 2” படத்தின் 2வது பாடல் வெளியானது

  தினத்தந்தி
“கும்கி 2” படத்தின் 2வது பாடல் வெளியானது

பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். தற்போது பிரபு சாலமன் - சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து ‘கும்கி 2’ படத்தில் பணிபுரிந்துள்ளது. இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. ‘கும்கி 2’ படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தில், கதாநாயகனாக மதியழகன் அறிமுகம் ஆகிறார். வில்லனாக ஹரிஷ் பெராடி அறிமுகம் ஆகிறார். இப்படத்தின் டீசர், டிரெய்லர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ‘கும்கி 2’ படத்தின் ‘ஹே குறிஞ்சியே’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை மோகன் ராஜ் வரிகளில் சிவாத்மிகா பாடியுள்ளார். இப்படம் நாளை வெளியாகிறது.#HeyKurinjiye - The Soothing Second Single from Kumki 2 is Here! Experience the emotional connect between the little boy and his elephant, brought alive through @nivaskprasanna’s music. ❤️: https://t.co/9IuXQv0tHL#Kumki2 from November 14th! #BornAgain… pic.twitter.com/QfqEqv7Cpi

மூலக்கதை