மம்முட்டியின் “களம்காவல்” டிரெய்லர் வெளியானது

  தினத்தந்தி
மம்முட்டியின் “களம்காவல்” டிரெய்லர் வெளியானது

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. சமீபத்தில் இவரது நடிப்பில் 'பசூக்கா' படம் வெளியானது. டீனா டென்னிஸ் இயக்கிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மம்முட்டி புதிய படமான ‘களம்காவல்’ படத்தில் நடித்துள்ளார். இதில் மம்முட்டியுடன் ஜெயிலர் படல் வில்லன் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், நடிகர் விநாயகனும் வில்லனாக மம்மூட்டியும் நடித்துள்ளார்.விநாயகன் மற்றும் மம்மூட்டியின் காட்சிகள் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. காவல்துறைக்குச் சவால்விடும் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார்.‘களம்காவல்’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த நிலையில், ‘களம்காவல்’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படம் வரும் 27ம் தேதி வெளியாகிறது.#Kalamkaval Official Trailer Out Now.Watch Trailer: https://t.co/Cp0DGpVPq7 pic.twitter.com/MnCmZv1Etq

மூலக்கதை