கிச்சா சுதீப்பின் “மார்க்” படப்பிடிப்பு நிறைவு

  தினத்தந்தி
கிச்சா சுதீப்பின் “மார்க்” படப்பிடிப்பு நிறைவு

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, அருந்ததி, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார். கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இது கிச்சா சுதீப்பின் 47- வது திரைப்படமாகும். இப்படத்திற்கு மார்க் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ‘மார்க்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த நிலையில் படக்குழு, ‘மார்க்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளது. இதனை புகைபடம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.Wrapped up with grandeur!Coming to you with love and hard work from the family of #MARK, as promised. ❤️@KicchaSudeep @VKartikeyaa@AJANEESHB @iampriya06 @shekarchandra71 @ganeshbaabu21 @shivakumarart @kevinkumarrrr @silvastunt @subbu6panchu @iYogiBabu @Naveenc212… https://t.co/pUy9aNKZks

மூலக்கதை