அர்ஜுனின் “தீயவர் குலை நடுங்க” டிரெய்லர் வெளியானது

  தினத்தந்தி
அர்ஜுனின் “தீயவர் குலை நடுங்க” டிரெய்லர் வெளியானது

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் அர்ஜுன். ஆக்சன் கிங் என அழைக்கப்படும் அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன்' உள்பட பல்வேறு படங்கள் பெரும் வெற்றிபெற்றன. சமீபகாலமாக அவர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, தினேஷ் லட்சுமணன் எழுதி , இயக்கியுள்ள ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தில் அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படத்தில் ஜிகே ரெட்டி, லோகு, பிக் பாஸ் அபிராமி, ராம்குமார், தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர். தினேஷ் லக்சுமணன் இந்த படத்தை எழுதி, இயக்கியுள்ளார். ஜி.ஆர். ஆர்ட்ஸ் நிறுவனமும் சன் மூன் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. பரத் ஆசிவகன் இந்த படத்திற்கு இசையமைக்க சரவணன் அபிமன்யு இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ தணிக்கை சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில், அர்ஜுன் நடித்துள்ள ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் 21 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.Thriller packed #TheeyavarKulaiNadunga Official Trailer Out Now https://t.co/kt5mMLvMu9@akarjunofficial @aishu_dil @aishu_dil @off_dir_Dinesh @BA_THE_MUSIC @gsartsoffl #GArulkumar @logu_npks @praveenraja0505 #AbhiramiVenkat @thangadurai123 @dineshashok_13 @zeemusicsouth pic.twitter.com/aV7Qncj2D0

மூலக்கதை