‘தேர்தலில் முரசு சின்னத்தில்தான் தே.மு.தி.க. போட்டியிடும்’ - பிரேமலதா விஜயகாந்த்
சென்னை,தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்(தே.மு.தி.க.) மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;- “தே.மு.தி.க. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. எங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட சின்னம் முரசுதான். அந்த முரசு சின்னத்தில்தான் தே.மு.தி.க. வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள். வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வருபவர்கள் தாராளமாக வரலாம். ‘வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’ என்றுதான் தமிழ்நாட்டிற்கு பெயர் உள்ளது. இங்கு வருபவர்கள் வேலை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளலாம். ஆனால் வாக்கு செலுத்துவதை அவரவர் சொந்த மாநிலத்தில் செய்வதுதான் முறையாக இருக்கும். இதில் தே.மு.தி.க.வுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. கூட்டணி விவகாரத்தில் எந்த ரகசியமும் கிடையாது. இன்று அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து பேசியிருக்கிறோம். கடலூரில் தே.மு.தி.க. மாநாடு விரைவில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு முன்பு மீண்டும் ஒருமுறை மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசுவோம். அவர்களிடம் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து கருத்து கேட்டு, அதன்படி கூட்டணி அமைப்போம். இது தொடர்பான அறிவிப்பை மாநாட்டிற்கு முன்பு பத்திரிகையாளர்களிடமோ, அல்லது மாநாட்டிலேயே கூட அறிவிப்போம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
