நிதிஷ் குமார் கட்சி 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது - பிரசாந்த் கிஷோர்
பாட்னா, பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன் தினம் நடைபெற்று முடிந்தது. முதல் கட்ட தேர்தலில் 66 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றிருந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலில் 69 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஆட்சியை பிடிப்பது எந்த கூட்டணி என்று அப்போது தெரிய வரும். மொத்தமுள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஆட்சியைப் பிடிக்க 122 இடங்கள் தேவை. முதல் கட்ட வாக்குப்பதிவில் தேஜஸ்வி-க்கு ஆதரவு அலை எழுந்ததுபோல் தோன்றியிருந்தாலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்குப் பின் கள நிலைமைகள் முற்றிலுமாக மாறியிருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகின. பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்பதே பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்தநிலையில், இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் அரசியலை விட்டே விலகுவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். ஒரு நேர்காணலின்போது, கருத்துக்கணிப்பு முடிவுகள் பற்றி பிரசாந்த் கிஷோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், 'தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றிருந்தால் என்னிடம் வந்து கூறுங்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன் 25 இடங்களுக்கு மேல் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெறாது. இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதுவொரு சாவல், இந்தத் தேர்தலோடு ஐக்கிய ஜனதா தளம் முடிந்துவிட்டது என்றுதான் பார்க்கிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
